நாகலாந்தில் மே 14 முதல் ஏழு நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமல்!
நாகலாந்து மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற மே 14ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் பல்வேறு அமல்படுத்தி உள்ளது.இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், வருகிற மே 14-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதாவது மே 14ம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது இந்த ஏழு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மேலும் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.