இன்று மதியம் 2 மணி முதல் மணிப்பூரில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை மணிப்பூரில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது. மொத்த எண்ணிக்கை இப்போது 2,015 ஆக உள்ளது. இவர்களில் 631 சிகிக்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக கொரோனாவால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,384 ஆக உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 68.68 சதவீதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மணிப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூர் அரசு அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கானது இன்று மதியம் 2 முதல் தொடங்குகிறது.
இன்று மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 2024 -க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீரை வழங்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் முக்கிய அங்கமாகும். வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டயுள்ளார்.
மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…