மணிப்பூரில் இன்று மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்.!

Default Image

இன்று  மதியம் 2 மணி முதல் மணிப்பூரில்  14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை மணிப்பூரில்  90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது. மொத்த எண்ணிக்கை இப்போது 2,015 ஆக உள்ளது. இவர்களில்  631 சிகிக்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக கொரோனாவால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,384 ஆக உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 68.68 சதவீதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மணிப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூர் அரசு அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கானது இன்று மதியம் 2 முதல் தொடங்குகிறது.

இன்று மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 2024 -க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீரை வழங்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் முக்கிய அங்கமாகும். வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டயுள்ளார்.

மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi