கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், வருகிற 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த சில நாட்களாக தினமும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் கர்நாடகாவில் பதிவாகி வந்ததுடன், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனை அடுத்து கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் வருகிற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 14 நாட்களுக்கும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் பொழுது பள்ளி, கல்லூரிகள் மற்றும் சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள் பூங்காக்கள் என அனைத்து இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மக்களுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், பார்சல்கள் மூலம் வீட்டிற்கு எடுத்து தான் செல்ல வேண்டுமே தவிர ஹோட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சுகாதார செயல்பாடுகள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடையவற்றுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மளிகை கடை மற்றும் பொது விநியோக கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுபான கடைக்கும் காலை 6 முதல் 10 வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்கள் மூடப்பட்டிருக்கும். வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் எப்பொழுதும் போல அதற்கேற்ற வேலை நேரத்தில் செயல்படும். மேலும் கேபிள் ஆபரேட்டர்களின் சேவைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…