பீகாரில் மே-15 வரை முழு ஊரடங்கு…! எவையெல்லாம் செயல்படும்…? எவையெல்லாம் செயல்படாது…?
பீகாரில் மே 15-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி உயிரிழந்து வருகின்றனர்.
இன்னிலையில் பீகாரில் மே 15-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 407 பேருக்குக் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த ஊரடங்கில் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
எவற்றுக்கெல்லாம் அனுமதி
- மருந்து கடைகள்
- உணவு வினியோகம்
- அத்தியாவசிய பொருட்களின் ஆன்லைன் வினியோகம்
- நோயியல் ஆய்வகம் மற்றும் சோதனை மையங்கள்
- தடுப்பூசி மையங்கள்
- மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் மருந்தகங்கள்
- அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள்
எவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
- வணிக வளாகங்கள்
- உணவகங்களில் உணவருந்துவது
- பார்கள் மற்றும் மதுபான கடைகள்
- ஜிம்கள்
- நீச்சல் குளங்கள்
- சலூன்கள் மற்றும் ஸ்பாக்கள்
- தனியார் அலுவலகங்கள்
- மாநில அரசு அலுவலகங்கள்