ஒரு கிலோ தக்காளி விலை கேட்டு உறைந்து போன பொதுமக்கள்..!
சமீபத்தில் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.இதை தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்து மக்களை உறைய வைத்து உள்ளது.
அதிக தக்காளி விளைச்சல் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா , கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது இதனால் டெல்லிக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.
இதன் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனையான தக்காளி சில நாள்களுக்கு முன் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது தக்காளி விலை 80-க்கு விற்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் தக்காளி விலை ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.