இன்று முதல்…6-12 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!!
6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,ஏற்கனவே,நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதே சமயம், இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.அதன்படி,நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.