கிருஷ்ண ஜெயந்திக்கு தலைவர்கள் வாழ்த்து.! மோடி முதல் இபிஎஸ் வரை..

Modi and EPS on Krishna Jayanti

சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி எனப்படும் இந்த பண்டிகை, திருஷ்டி பூஜையில் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். இந்நன்னாளில் பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா” என குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கிருஷ்ண ஜெயந்தி” என்றும்,  “கோகுலாஷ்டமி” என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும். எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், “தனக்காக இல்லாமல், பிறருக்காக சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து அனைத்து உயிர்கள் மீதும் கருணை மழை பெய்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கோகுலாஷ்டமி” என்றும், “கிருஷ்ண ஜெயந்தி” என்றும் கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி. டி. வி. தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில் தர்மம் செழிக்கவும், அறம் வளரவும், அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் “என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகிட அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், ” ஜன்மாஷ்டமியின் இனிய தருணத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இலட்சியங்களையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் ஏற்றுக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை

பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “அனைவருக்கும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான, இன்று அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகவும், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக அருளினை வேண்டிக் கொள்கிறேன், இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்