தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியதில் இருந்து ஐ.ஐ.டி-யில் நடந்த தொடர் தற்கொலை, பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட சீரியல் கிஸ்ஸர் போன்ற நிகழ்வுகள் குறித்த டாப் 10 செய்திகளை காண்போம்.
14.03.2023 : இன்றைய நாளின் முக்கிய செய்திகள்.
தங்கம் விலை நிலவரம் :
தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுவதும் படிக்க : தொடர்ந்து ஏறுமுகம் காணும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ. 520 உயர்வு..!
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
முழுவதும் படிக்க : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை :
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடமிருந்து 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் போலீசார் கைபற்றிய 2.4 கிலோ தங்க நகைகளை நீதிமன்றத்தில் உரிமை கோரி போலீசார் பெற்றனர்.
முழுவதும் படிக்க : சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை – கொள்ளையர்களிடம் இருந்து 4.5 கிலோ நகைகள் பறிமுதல்..!
டிராவிட் புகழாரம் :
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் , விராட் கோலி பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
முழுவதும் படிக்க : இதனால் தான் அவர் “சாம்பியன்”.. டிராவிட் புகழாரம்..!
லியோ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ் :
லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை இன்று லியோ படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு காஷ்மீரில் செம பார்ட்டி ஒன்றும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசில் மனாஸில் கனமழை :
பிரேசிலின் மனாஸ் நகரில் பெய்துவரும் கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது, இதனால் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுவதும் படிக்க : பிரேசில் மனாஸில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி.!
அதிகரித்து வரும் பன்றி காய்ச்சல் :
தற்போது இந்தியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்த பல்வேறு தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளது.
முழுவதும் படிக்க : அதிகரித்து வரும் பன்றி காய்ச்சல்.. அறிகுறிகள்.. தடுக்கும் வழிமுறைகள்..! மத்திய சுகாதாரத்துறை கூறுவது எனன.?
ஐஐடியில் மீண்டும் ஒரு தற்கொலை :
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், சென்னை ஐ.ஐ.டியிலும் கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
முழுவதும் படிக்க : ஐஐடியில் மீண்டும் ஒரு தற்கொலை… நிர்வாகம் பரபரப்பு விளக்கம்!
சீரியல் கிஸ்ஸர் :
பீகாரில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ காட்சி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முழுவதும் படிக்க : பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட ‘சீரியல் கிஸ்ஸர்’..! வெளியாகிய அதிர்ச்சி வீடியோ..!
தசரா பட டிரைலர் :
தசரா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. அதைப்போல நானியின் அசுரத்தனமான நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
முழுவதும் படிக்க : நானி – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தசரா’ படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு..!
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…