காசோலை மூலம் செலுத்தப்படம் பணம் தொடர்பான அதன் நடைமுறையில் பாங்க் ஆப் பரோடா சில மாற்றங்களைச் செய்துள்ளது, அதே நேரத்தில் கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஐஎஃப்எஸ்சி குறியீடு தேவைகள் தொடர்பான சில மாற்றங்களைச் செய்துள்ளன.
நீங்கள் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி அல்லது சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த வங்கிகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சமீபத்திய சில மாற்றங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
காசோலை மூலமாக பணம் செலுத்தப்படும் அதன் வழக்கமான நடைமுறையில் சில மாற்றங்களை பாங்க் ஆப் பரோடா செய்துள்ளது.கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு தேவைகள் தொடர்பான சில மாற்றங்களைச் செய்துள்ளன.
பாங்க் ஆப் பரோடாவின் காசோலை கட்டண மாற்றங்கள்:
வருகின்ற ஜூன் 1 முதல், பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு காசோலைகள் மூலம் செலுத்தும் போது மோசடி சம்பவங்களைத் தடுக்க ‘Positive pay confirmation’ என்ற முறையை கட்டாயமாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்குவதற்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் அதிக மதிப்புமிக்க காசோலைகளை சி.டி.எஸ் கிளியரிங் வழங்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் கடந்து செல்ல முடியும் என்று பாங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
வங்கி மேலும் கூறியதாவது அனுப்ப வேண்டிய தொகை ரூ .2 லட்சத்துக்கு மேல் இருக்கும்போது மட்டும் வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலை விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியின் IFSC குறியீடுகள் இந்த தேதியில் மாற்றம்:
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைகளின் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம், சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கிளையின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை 2021 ஜூன் 30 க்குள் புதுப்பிக்குமாறு கூறியுள்ளது.
இந்த வங்கிகளின் புதுப்பிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகளை அறிய அந்தந்த வாடிக்கையாளர்கள் சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியின் வலைத்தளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியில் இணைக்கப்பட்டது. அதே ஆண்டில் மற்றொரு பெரிய வங்கி இணைப்பு பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இது இந்த வங்கிகளின் செயல்பாடுகளை இணைத்தது சிறந்த செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…