2018 முதல் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ.!

Default Image

கடந்த 5 வருடத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக இந்திய அரசு தகவல்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கிடையே வணிக ஒப்பந்தத்தின் கீழ் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே3 ஏவுகணைகள் மீது இந்த செயற்கைக்கோள்கள், விண்ணில் செலுத்தப்பட்டன.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா குடியரசு, சிங்கப்பூர்,ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச்சேர்ந்த 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ஒப்பந்தத்தின் கீழ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 5 வருடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

விண்வெளி நடவடிக்கைகளில் வர்த்தகம் சார்ந்த அணுகுமுறையை கொண்டு வரவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துவதற்காகவும் ஜூன் 2020 இல் தொலைநோக்கு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இதன்விளைவாக 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு, LVM3 வடிவில் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுதல் மிகப்பெரிய வணிகரீதியான ஏவுதலாகக் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்