இரு நாட்டுடைய நட்பு அசைக்க முடியாத நட்பு -பிரதமர் மோடி.!
- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகையை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- அதில் பேசிய பிரதமர் மோடி இரு நாட்டுடைய நட்பு அசைக்க முடியாத நட்பு என கூறினார்.
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அகமதாபாத் விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதையெடுத்து ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் டிரம்ப்விற்கு காந்திய முறைப்படி கதர் துண்டு அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதையெடுத்து சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையில் நூல் நூற்கும் முறையைப் பற்றிய சபர்மதி ஆசிரம நிர்வாகி டிரம்ப்பிற்கு விளக்கி காட்டினார்.பிறகு மனைவியுடன் அதிபர் ட்ரம்ப் ராட்டையை சுழற்றி பார்த்தார்.
கடைசியாக ஆசிரமத்தில் இருந்த விருந்தினர் பதிவேட்டில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு தனது கருத்தை பதிவிட்டார்.அங்கிருந்து புறப்பட அதிபர் ட்ரம்ப் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி கலந்து கொள்ள சென்றார். அந்த நிகழ்ச்சியில் இருநாட்டு தேசிய கீதம் பாடப்பட்டு பின்னர் பிரதமர் மோடி வரவேற்பு உரை கொடுத்தார்.
இதையடுத்து அதிபர் ட்ரம்ப் உரையை தொடங்கினார். அப்போது இந்தியர்களின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு ஒரு உதாரணம் என்றும், அன்று டீ விற்றவர் இன்று நாட்டின் பிரதமர் என மோடியை ட்ரம்ப் புகழ்ந்து பேசினார். பின்னர் இந்திய பிரதமர் மோடி தனதுஉரையை தொடங்கினர் ,அமெரிக்கா மீது இந்தியா மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறது. இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான் டிரம்பின் வருகை அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெருமை என்றும் மேலும் இரு நாட்டுடைய நட்பு அசைக்க முடியாத நட்பு பிரதமர் மோடிஎன கூறினார்.