சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!
ஜார்க்கண்டில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு விபத்து ஏற்பட்டு ரயில்கள் தீப்பிடித்ததால் 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மின்சார உற்பத்தி நிறுவனமான NTPC-யால் இயக்கப்படும் இரண்டு ரயில்களும், விபத்து நடந்த தண்டவாளங்களும் NTPC-க்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த ரயில்கள் NTPC-யின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த விபத்து தொடர்பாக கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கௌசிக் மித்ரா கூறுகையில், “சரக்கு ரயில்கள் மற்றும் தண்டவாளம் இரண்டும் NTPC-க்கு சொந்தமானது. இதற்கும் இந்திய ரயில்வேக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
STORY | 2 drivers killed, 4 injured as goods trains operated by NTPC collide head-on in Jharkhand
READ: https://t.co/lBkZzhOrVL
VIDEO:
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/LUUALfS4ur— Press Trust of India (@PTI_News) April 1, 2025