பொது இடங்களில் இலவச வைஃபை.. மத்திய அரசு ஒப்புதல்!
பொது இடங்களில் PM Wani என்ற பெயரில் இலவச வைஃபை சேவையை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்தவொரு கட்டணமும் விதிக்காமல் பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் இலவச வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, PM WANI என்ற பெயரில் பொது இடங்களில் இலவசமாக வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் டேட்டா சென்டர்கள் திறக்கப்படும். அதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்களை திறக்கவும், கொச்சி மற்றும் லட்சத்தீவுகளுக்கு இடையே நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.