எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை – டெல்லி அரசு அறிவிப்பு
எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபையை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதா, முதல் வைஃபை சேவை 24-48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றார். இதற்கிடையில், விவசாயிகள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் சிரமங்களை சந்தித்ததால் வைஃபை நிறுவுமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அவர் கூறினார்.
आम आदमी पार्टी किसानों के लिए प्रदर्शन की जगह पर Wifi लगाएगी। पहला हॉटस्पॉट 24 से 48 घंटे के अंदर शुरू होगा।
परिजनों से बात करने में दिक्कत होने के कारण किसानों ने मुख्यमंत्री @ArvindKejriwal जी से Wifi लगाने की मांग की थी।- श्री @raghav_chadha pic.twitter.com/2WgS0nLFEF
— AAP (@AamAadmiParty) December 29, 2020
மூன்று புதிய மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு அருகிலுள்ள தங்கள் போராட்ட அரங்குகளில் தங்கியிருந்தனர், மூன்று சட்டங்களையும் அகற்றுமாறு அரசாங்கத்தை கோரினர்.
இதுவரை, விவசாயிகளை வற்புறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதுது. இப்போது, அரசாங்கத்திற்கும் விவசாய தலைவர்களுக்கும் இடையில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.