5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும்..! – மத்திய நிதியமைச்சர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சுற்றுலாத்துறைக்கு சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சுகாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் சுற்றுலாத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உத்தரவாதம் இன்றி ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும், சுற்றுலா நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உத்தரவாதம் இன்றி வழங்கப்படும் என்றும், சர்வதேச பயணங்கள் மீண்டும் தொடங்கியதும், இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.