அனைவருக்கும் இலவச தடுப்பூசி.., சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு..!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலவை ஏற்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 க்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும் அதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தனது ட்விட்டரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செல்வதற்கான செலவை ஏற்பதாகவும் மக்களின் உயிர்காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்துள்ளார். மத்திய அரசு போதிய அளவிலான கொரோனா தடுப்பூசிகளை வழங்க சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் வலியுறுத்தியுள்ளார்.
छत्तीसगढ़ में 18 वर्ष से अधिक उम्र के लोगों को कोरोना वैक्सीन का भुगतान राज्य सरकार करेगी।
अपने नागरिकों की जीवन रक्षा के लिए हम हर संभव कदम उठाएंगे।
केंद्र सरकार से अनुरोध है कि वह पर्याप्त संख्या में वैक्सीन की उपलब्धता सुनिश्चित करे।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) April 21, 2021
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,625 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை ஏற்கனவே, ரூ.250-க்கு விற்பனை செய்த சீரம் நிறுவனம் தற்போது கோவிஷீல்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600, மாநில அரசுகளுக்கு ரூ.400 என உயர்த்தியுள்ளது. தற்போது கோவிஷீல்டின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.