ஒரு கொரோனா நோயாளி எதிர்மறையாக தொற்று பரிசோதிக்கப்பட்ட பின்னும் நோயாளி பொது வார்டில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என உத்திரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னும், பலருக்கு உடலசம்பந்தமான பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு பின் ஏற்படக்கூடிய சிக்கலால் ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவருக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பல மருத்துவ நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, இது குறித்து உத்தரபிரதேச தலைமை செயலாளர் அலோக் குமார், சுகாதார அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘பல சந்தர்ப்பங்களில் எதிர்மறையான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு பிறகு ஏற்படும் பிராச்சனைக காரணமாக ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சில வசதிகள், கட்டணம் அடிப்படையில் கிடைக்கின்றன.
இருப்பினும் சில மருத்துவ நிறுவனங்கள் ஒரு கொரோனா தொற்றுக்கு பின் ஏற்படும் பிரச்னையால் நோயாளியை பொது வார்டில் வைத்து இருந்தால், அவர்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி வருகிறது. எனவே, ஒரு கொரோனா நோயாளி எதிர்மறையாக தொற்று பரிசோதிக்கப்பட்ட பின்னும் நோயாளி பொது வார்டில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்குமாறு, எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.’ என எழுதியுள்ளார்.
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில், ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து முதல் முறையாக தினசரி COVID-19 நேர்மறை விகிதம் 1% க்கும் குறைவாக காணப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…