கொரோனாவால் பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்ளுக்கு சிகிச்சை இலவசம் – மத்திய அரசு!
கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினகளுக்கு கொரோனா சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. அதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பத்திரிக்கையாளர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் கொரோனாவின் தீவிரம் எவ்வளவு அதிகரித்தாலும் தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் உள்ள பல பத்திரிக்கையாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளத்துடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவை மத்திய பிரதேச அரசு ஏற்கும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர்களும் கொரோனா காலகட்டத்தில் முன் களப்பணியாளர்கள் ஆகத்தான் பணியாற்றுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.