ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணம் – உபி அரசு

Default Image

உ.பி.யில் ரக்சா பந்தனை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள்  இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்சா பந்தன் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பெண்கள்  தங்களது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது ஆகும்.

இந்த நாள் கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால், ஒரு, ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. மணிக்கட்டில், கயிறு காட்டியவுடன், அந்த ஆண் தனது சகோதரிக்கு ஏதாவது ஒரு பரிசு அல்லது தன்னால் இயன்ற பணத்தை வழங்குவது வழக்கம்.நாளை ரக்சா பந்தன்  விழா கொண்டப்படுகிறது.

 இந்நிலையில்   உத்தரபிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நாளை கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.அனைத்துவகை பேருந்துகளிலும் பெண்கள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்