நீரஜ் சோப்ரா என பெயருடைவர்களுக்கு ரூ.501க்கு இலவச பெட்ரோல்!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை கொண்டாட நீரஜ் சோப்ரா என பெயர் வைத்துள்ளவர்களுக்கு ரூ.501க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன. நீரஜ் சோப்ராவுக்கு அரசு தரப்பிலும், தனியார் தரப்பிலும் பல்வேறு பரிசுகள், சலுகைகள் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில், குஜராத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்த ஆயுஷ் பதான் என்ற உள்ளூர் பெட்ரோல் பங்கு உரிமையாளர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை கொண்டாட நீரஜ் சோப்ரா என பெயர் வைத்துள்ளவர்களுக்கு ரூ.501க்கு பெட்ரோல் இலவசமாக போட்டு, இந்த அதிரடி சலுகையை வழங்கியுள்ளார்.
மேலும், பெட்ரோல் பங்கு இருக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் நீரஜ் சோப்ரா என பெயர் வைத்துள்ளவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து, ரூ.501க்கு இலவசமாக பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, ஏராளமானோர் இலவசமாக பெட்ரோல் போட்டு சென்றுள்ளனர்.