சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சியில் கார்பேஜ் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் அஜய் திர்க் கூறும்போதுஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால் மதிய உணவும் , அரை கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால் காலை உணவும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் குப்பை பொறுக்குவோருக்கும் , நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக உள்ளது. அடுத்த கட்டமாக குடியிருப்பு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அம்பிகாபூர் மாநகராட்சியின் இந்த உணவு திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.550,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட தாகவும் இதன் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக்கை சாலைகள் போட பயன்படுத்தி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…