தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதி பி.எஸ்.என்.எல். அறிவிப்பு !!!

Default Image
  • இந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை.
  • இந்த சலுகையின் மூலம் தினமும்  5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
  • 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ளலாம்.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில்  தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை நேற்று அறிமுகம் செய்தது.

தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை தொலைபேசி அழைப்பு மூலம் பெறலாம் எனவும் , அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அறிவித்து உள்ளது. 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை. இந்த சலுகையின் மூலம் தினமும்  5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
இதைப்போல ஏற்கனவே பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கும் 25 சதவீத கேஷ்பேக் சலுகைகளும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்