ஐயப்ப பக்தர்களுக்கு ‘ஹாட் ஸ்பாட்’ நியூஸ்.! 48 இடங்களில் இலவச இன்டர்நெட் வசதி.!

ஐயப்ப பக்தர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்குவதற்காக சபரிமலை பகுதியில் 48 இடங்களில் Wifi Hotspot வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Free wifi Hotspot in Sabarimala

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

இன்று முதலே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை ஆரம்பமாகிவிடும். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சமயங்களில் ஐயப்ப பக்ததர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக நெட்ஒர்க் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

இந்த நெட்ஒர்க் சிரமங்களை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பக்தர்கள் வசதிக்காக 48 இடங்களில் இலவச Wifi HotSpot வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இன்டர்நெட் வசதிகள் சபரிமலை சன்னிதானம் முதல் நிலக்கல் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை வழித்தடத்தில் புதிய 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்