புதுச்சேரியில் பட்டியலினத்தவருக்கு இலவச வீட்டுமனை பட்டா – முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் பட்டியலினத்தவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரம் நடைபெற்று வருகிறது. அப்போது, பட்டியலினத்தவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சிறப்பு கூறு நிதி மூலம் நிலம் கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார். புதுச்சேரியில் பட்டியலினத்தவருக்கான சிறப்பு கூறு நிதியில் 49% மட்டுமே செலவு செய்ததாக திமுக புகார் அளித்துள்ளார். எஞ்சிய 51% நிதியை செலவிடாதது தவறு என்று திமுக உறுப்பினர் சிவா, சுயேட்சை உறுப்பினர் அங்காளன் பேரவையில் புகார் தெரிவித்தார். பட்டியலினத்தவர் மேம்பாட்டு பணிக்கு தனி கவனம் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.