புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ₹3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். உணவு தானியங்கள் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ சுண்டல் வழங்கப்படும் .வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.