இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.1,000.. ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்.!
ஆம் ஆத்மி கட்சி : ஹரியானா மாநிலத்தில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கெஜ்ரிவால் மனைவி வாக்குறுதி அளித்துள்ளார்.
ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை பஞ்ச்குலாவில் இன்று தொடங்குகியது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பஞ்ச்குலாவில் இன்று வாக்குறுதிகளை அளித்தார்.
- 24 மணி நேர இலவச மின்சாரம்
- அனைவருக்கும் இலவச மருத்துவம்
- குழந்தைகளுக்கு நல்ல தரமான இலவசக் கல்வி
- வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை
- பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஆகியவை உத்தரவாதங்களில் அடங்கும்.
அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால், அவரின் மனைவி சுனிதா, இந்த அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.