தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்!
தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. டெல்லியில் மட்டுமல்லாமல் மேலும் ஒரு மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவோம் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவசமாக கல்வி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.