கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை ஆகியவை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் குழந்தைகள் பெற்றோரை இழந்தும், பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனாவால் பெற்றோரை அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்படுத்தித் தருவோம் எனவும், அந்த குழந்தைகளுக்கு இலவசமாக மாதம்தோறும் ரேஷன் மற்றும் 5,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு மத்திய பிரதேச அரசு ஆதரவளிக்கும் எனவும், ஏனென்றால் அந்த குழந்தைகள் அரசின் குழந்தைகள், அவர்கள் கவலைப்பட தேவையில்லை. அரசு அவர்களை கவனித்துக் கொள்ளும் எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…