காஷ்மீரின் உள்ளூர் செய்தித்தாளின் முதற்பக்கத்தில் இலவச முகக்கவசம்! குவியும் பாராட்டுக்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ரோஷ்னி என்ற உருது செய்தித்தாள், தனது செவ்வாய்க்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் இலவச முககவசத்தை இணைந்திருந்தது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில், மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த முயற்சியால், பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இரண்டு ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாசகர்களை அதன் புதுமையான யோசனையுடனும், அதனுடன் ஒரு உரையுடனும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது. அதில் “மாஸ்க் கா இஸ்தெமல் ஸாரூரி ஹை” (முகமூடியைப் பயன்படுத்துவது முக்கியம்) என பதிவிட்டுருந்தன.
மேலும், ஒரு துணை உரையில், ‘இதன் மூலம், நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வாசகர்கள் இதனை தங்கள் இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…