மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.
முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் , பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…