குஜராத்தில் போலி சுங்கச் சாவடி மூலம் கோடிக்கணக்கில் மோசடி… தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

Fake Toll Plaza

குஜராத்தில் போலி சுங்க சாவடி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில், தனிநபர்கள் குழு ஒரு வருடத்திற்கும் மேலாக போலி சுங்க சாவடி அமைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தனியார் நிலத்தில் நெடுஞ்சாலையை புறக்கணித்து போலி சுங்கச்சாவடி அமைத்து ஓராண்டுக்கு மேலாக அரசு அதிகாரிகளை ஏமாற்றி வந்துள்ளனர். குஜராத்தின் மோர்பியில் அமைந்துள்ள இந்த போலி சுங்கச்சாவடி, தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டு, நிலையான விகிதத்தில் பாதி கட்டணத்தை விதித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து, அதற்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றி விட்டுள்ளனர். அப்பாதையில் உள்ள வர்கசியா சுங்கச்சாவடி கட்டணத்தில் 50% மட்டுமே போலியாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்பட்டு வந்ததால், இதுகுறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைக்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வகாசியா சுங்கச்சாவடியின் பொறுப்பாளர், போலி சுங்கச்சாவடியை நிர்வகிப்பவர்கள் 1.5 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் கணிசமான அளவு பணத்தை வெளிப்படையாக மிரட்டி வாங்கியதாக கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணம்.. இன்று முதல் அமல்!

இதன்பின், நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தவளின் அடிப்படையில் நடந்த ஆய்வில் உண்மை அம்பலமானது. இதனைத்தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மோர்பி மாவட்ட ஆட்சியர் ஜிடி பாண்டியா கூறுகையில், வர்காசியா சுங்கச்சாவடியின் வழித்தடத்தில் இருந்து சில வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, போலி சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூலிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி சுங்கச்சாவடி 1.5 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ளது. இந்த போலி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநர்களிடம் கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் போலியான அரசு அலுவலகத்தை நிறுவி, அதை மூன்று ஆண்டுகளாக நடத்தி, 4 கோடி ரூபாய்க்கு மேல் அரசு நிதியை வசூலித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட  சில நாட்களுக்கு பிறகு போலி சுங்கச் சாவடி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert