சந்தை ஏற்ற இறக்கம்” காரணமாக FPO நிறுத்தம்- கெளதம் அதானி விளக்கம்

Default Image

சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக எஃப்பிஓ(FPO) நிறுத்தப்பட்டதாக முதலீட்டாளர்களிடம், கவுதம் அதானி கூறியுள்ளார்.

நேற்றைய சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொண்டு, FPO பங்குகளின் விற்பனையை தொடர்வது சரியாக இருக்காது என்று வாரியம் வலுவாக உணர்ந்ததால் அதனை நிறுத்தியுள்ளதாக கவுதம் அதானி கூறினார். இது குறித்து கெளதம் அதானி கூறும்போது, தனது குழுமத்தின் அடிப்படைகள் மிகவும் வலுவானவை, ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் விமர்சன அறிக்கைக்குப் பிறகு பங்குகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பங்கு விற்பனை நிறுத்துவதற்கான முடிவை எடுத்ததாக அவர் விளக்கினார்.

ஒரு தொழிலதிபராக 40 வருடங்களுக்கும் மேலான எனது பயணத்தில், அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும், குறிப்பாக முதலீட்டாளர்களின் பெரிய ஆதரவைப் பெறுவதற்கு நான் பாக்கியம் செய்திருக்கிறேன், என் வாழ்க்கையில் நான் சாதித்தவை எல்லாம் என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையால்தான் என்பதை ஒப்புக்கொள்வது தான் சரியாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை, எனது முதலீட்டாளர்களின் நலன் தான் முதன்மையானது, மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம் தான், எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை இழப்புகளில் இருந்து காப்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அதானி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

அதானி எண்டர்பிரைசஸ் தனது ரூ.20,000 கோடி எஃப்பிஓ(FPO) வை முழுமையாக சந்தா செலுத்திய, ஒரு நாளுக்குப் பிறகு, இந்த முடிவை நேற்று இரவு அறிவித்தது, மேலும் முதலீட்டாளர்களுக்கு வருமானத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்க குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் மோசடி குற்றச்சாட்டுகளை அடித்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்றும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.

சந்தை நிலைப்படுத்தப்பட்டவுடன், குழுமம் அதன் மூலதன(Capital) சந்தை யுக்தியை ஆய்வு செய்யும் என்று அதானி கூறினார். எங்கள் நிறுவனத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. நிறுவனத்தின் நீண்ட காலவளர்ச்சி  உருவாக்கத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம், FPO க்கு நீண்ட ஆதரவை வழங்கிய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அதானி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்