லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை.
கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில், இன்று மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமண்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள், சீன எல்லைக்குள் வைத்து நடைபெற்றது. ஜூன் 30 அன்று கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீனப் படைகள் பின்நோக்கி நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் இடையே ஜூலை 5-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…