தாஜ் மஹால் வளாகத்தில் காவி கொடியசைத்த நான்கு பேர் கைது!

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில், இந்துத்துவா குழுவின் நான்கு உறுப்பினர்கள் காவி கொடியசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தாஜ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர திரிபாதி கூறுகையில், வலதுசாரி தலைவர் குவாரா தாகூர் தலைமையில் தாஜ்மஹால் வளாகத்தில் 3 பேர் காவி கொடிகளை அசைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்து ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். தாகூர் அவர்கள் இளைஞர் பிரிவின் மாவட்ட தலைவராக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீது, சி.ஐ.எஸ்.எஃப் புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025