ராஜஸ்தானில் மேலும் 4 பேர் பலி..123 பேருக்கு கொரோனா உறுதி.!

ராஜஸ்தானில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை நாள்தோறும் அந்தந்த மாநில சுகாதர அமைப்பு வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் 42,533 பேர் பாதிக்கப்பட்டு, 1,373 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,533 பேரில் 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டு, 548 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 2,115 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து குஜராத்தில் 5428, டெல்லியில் 4549, தமிழ்நாட்டில் 3023, ராஜஸ்தானில் 2886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3009 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். ஏற்கனவே அங்கு 71 பலியாகியுள்ள நிலையில், தற்போது 75 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1005 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை 1356 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தற்போது கொரோனா வார்டில் 1578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025