காரின் என்ஜினில் இருந்த நான்கு அடி மலைப்பாம்பு..!
ஆக்ராவில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் காரின் உள்ள என்ஜின் முன்பகுதியில் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் உடனடியாக ஒரு மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு காரில் இருந்து பாம்பை பிடித்தனர். தற்போது வெப்பநிலை குறைவதால், இந்த பாம்புகள் நகர்ப்புறங்களில் தங்குமிடம் தேடுகின்றன என்று வனவிலங்கு எஸ்ஓஎஸ் பாதுகாப்பு திட்ட இயக்குநர் கூறினார்.