ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் 4 பேர் உயிரிழப்பு..!-ஒருவர் மாயம்..!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் மேகம் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவரை காணவில்லை.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்கிவாச்சியின் மேல் பகுதியில் மேகம் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய ஐந்து பேரின் குடும்பம் ரஜோரியில் உள்ள கல்சியான் நவ்ஷேராவில் வசித்து வருபவர்கள்.
இந்த மேக வெடிப்பில் முகமது தாரிக் காரி (8), ஷாஹனாசா பேகம் (30), நாஜியா அக்தர் (14), ஆரிஃப் ஹுசைன் காரி (5) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், முகமது பஷீர் காரி (80) என்பவரை காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தேடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.