நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பணியிடங்களுக்கு விண்ணப்பத்திற்கான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
பணி : Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT).
காலியிடங்கள் : 8,000
தகுதி : Post Graduate Teacher (PGT) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று, பி.எட் முடித்திருக்க வேண்டும்.
TGT, PRT பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதேபோல் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று, பி.எட் முடித்திருக்க வேண்டும். குறிப்பாக CET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு : 5 ஆண்டுக்கும் குறைவான பணி அனுபவம் உள்ளவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 5 ஆண்டுக்கும் மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முக்கிய நகரங்களில் வரும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
தேர்வுக் கட்டணம் : ரூ.500 (ஆன்லைனில் செலுத்தலாம்)
விண்ணப்பிக்கும் முறை : http://aps-csb.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்விற்கான அனுமதிசீட்டு நவம்பர் 4-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.10.2020 ஆகும்.
மேலும் விவரங்கள் http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…