“கொரோனா வைரஸ் கிருமியும் ஒரு உயிர்தான்!நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு”,என உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,மக்கள் மிகவும்இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில்,உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்,கொரோனா வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினம்தான்,அதற்கு வாழ உரிமை உண்டு என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து,உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்,தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்ததில் கூறியதாவது,”ஒரு தத்துவ கோணத்தில் இருந்து பார்த்தால் கொரோனா வைரஸ் கிருமியும் ஒரு உயிருள்ள உயிரினம்தான்,எனவே,நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு.எனினும்,மனிதர்களாகிய நாம், நம்மை மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு கொரோனா வைரஸ் கிருமியை அழிக்க நினைக்கிறோம்.ஆனால்,அந்த வைரஸ் தன்னை தற்காத்துக்கொள்ள தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது.
இருப்பினும்,மனிதர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வைரஸை எதிர்த்து போராடிதான் ஆக வேண்டும்.”,எனக் கூறினார்.முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங்கின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து,ஒரு ட்விட்டர் பயனர்,”இந்த வைரஸ் உயிரினத்திற்கு மத்திய விஸ்டாவில் தங்குமிடம் வழங்கப்பட வேண்டும்” என்று கிண்டலாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் உள்ள மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்து கடுமையாகப் போராடும் இந்த நேரத்தில் தற்போது இந்த கருத்து தேவையா என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…