வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த உத்திரபிரதேச முன்னாள் அமைச்சர்…! போலீசார் தீவிர விசாரணை…!

வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த உத்திரபிரதேச முன்னாள் அமைச்சர்.
உத்தரபிரதேச முன்னாள் அமைச்சரான ஆத்மராம் தோமர், பிஜிரால் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தோமரின் டிரைவர் விஜய் காலை அவரது வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் அவர் பதிலளிக்கவிலை.
அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் யாரும் கதவைத் திறக்காதபோது, அவர் உள்ளே நுழைந்து பார்த்த போது, தோமர் இறந்து கிடந்துள்ளார். அவரது கழுத்தில் ஒரு துண்டு போர்த்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அவரது கார் மற்றும் தொலைபேசி காணவில்லை. விஜய் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, போலீசார் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தோமர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025