முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சரண் சேத்தி உடல்நலக்குறைவால் காலமானார்!

Published by
Surya

முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரான அர்ஜுன் சரண் சேத்தி, உடல்நலக்குறைவால் நேற்று தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் சரண் சேத்தி, கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவர், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு, எட்டு முறை மக்களவை எம்.பி.யாக தேர்வானார். அதுமட்டுமின்றி, ஒடிசா மாநில சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இறுதியாக, கடந்த 2019ம் ஆண்டு பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் 79 வயதாகும் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

10 mins ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

49 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

2 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

2 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago