நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை..!
1999 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக திலீப் ராய் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த வழக்கில், திலீப் உடன் 4 பேர் அக்டோபர் 6 ஆம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். அக்டோபர் 14 ஆம் தேதி, சிபிஐ வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவரின் வயதுக்காக தண்டனை குறைக்க வேண்டும் என விவாதம் நடைபெற்றது.
இதைக்கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர், இரு தரப்பினரையும் கருத்தை கேட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அதன்படி, இன்று திலீப் உடன் 4 பேர் குற்றவாளிகள் ஆஜரான நிலையில், சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ .25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், முன்னாள் சுரங்க செயலாளர் எச்.சி.குப்தாவும் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.