#BigBreaking:முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக தலைவருமான சாமன் லால் குப்தா காலமானார்

Default Image

முன்னாள் மத்திய அமைச்சரும்,பிஜேபியின் மூத்த தலைவருமான சாமன் லால் குப்தா உடல்நலக்குறைவால் காலமானார்.

பாஜகவின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான சாமன் லால் குப்தா,மே 5 ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஜம்முவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து,லால் குப்தா கொரோனாவிலிருந்து குணமடைந்து  ஞாயிற்றுக்கிழமை  மருத்துவமனையில் இருந்து காந்தி நகரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில்,திடீரென்று உடல்நிலை மோசமாகி பாஜகவின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான சாமன் லால் குப்தா(வயது 87),இன்று அதிகாலை 5.10 மணியளவில் உயிரிழந்தார்.

இதனையடுத்து,முன்னாள் மத்திய அமைச்சரான சாமன் லால் குப்தாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,’லெப்டினன்ட் கவர்னர் ஜம்மு-காஷ்மீர் அலுவலகம்’ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“முன்னாள் மத்திய மந்திரி பேராசிரியர் சாமன் லால் குப்தா ஜி காலமானதைப் பற்றி கேள்விப்பட்டபோது மிகவும் வேதனையடைந்தது.ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி மற்றும் பரவலாக மதிக்கப்படும் பொது நபர், அவரது மறைவு அரசியல் துறையில் பெரும் இழப்பு.

மக்களின் நலனுக்காக அவர் செய்த மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்”,என்று பதிவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து,மறைந்த மூத்த தலைவர் லால் குப்தாவின் மறைவிற்கு பாஜக மற்றும் பிற கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்