கடந்த 8-ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார். விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இடுப்பு எலும்பு முறிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு..!
மருத்துவமனையில் இருந்த சந்திர சேகர ராவை, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் சிலர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், இன்று அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆறு முதல் எட்டு வாரங்களில் கேசிஆர் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…