மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சந்தன் மித்ரா மறைவு…! பிரதமர் மோடி இரங்கல்…!
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீ சந்தன் மித்ரா ஜி புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டவர். இவர், அரசியல் மற்றும் ஊடக உலகில் தனக்கென தனி இடம் பதித்தவர். அவரது மறைவால் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.
Shri Chandan Mitra Ji will be remembered for his intellect and insights. He distinguished himself in the world of media as well as politics. Anguished by his demise. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 2, 2021