ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று காரணமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் முக்கியமாக அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலர் தொடர்ந்து உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக 1980 முதல் 1981 வரை செயல்பட்டவர் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெகநாத் பஹாடியா. இவர் கவர்னராக பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகநாத் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெகநாத் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி ஜெகநாத் அவர்களின் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெகநாத் அவர்களது மறைவிற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…