V Narayanasamy [Image source : ANI]
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
மணிப்பூர் மாநில கலவரம் பற்றியும், இந்தியாவின் கடன் விவரம் பற்றியும் ஆளும் பாஜக அரசு மீது புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்த போது, பாஜகவானது, ஒவ்வொரு குடிமகன் மீது காங்கிரஸ் 5 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது என குற்றம் சாட்டினர். ஆனால், தற்போது பாஜக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் 15 லட்ச ரூபாய் கடன் உள்ளது.இதற்கு பாஜகதான் பதில் கூற வேண்டும்.
காங்கிரஸ் கட்சி இந்த கடன் விவரம் பற்றி கேட்கப்பட்டதற்கு இதுவரை யாரும் கூறவில்லை. மத்திய நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் பதில் கூறவில்லை. பாஜக இந்திய பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது என குற்றம் சாட்டினார்.
மேலும் நாரணயசாமி பேசுகையில், மணிப்பூர் அமைதியாக இருந்த மாநிலம். தீவிரவாதம் இருந்த பகுதிகளில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ஓக்ரம் இபோபி சிங் (Okram Ibobi Singh) தீவிரவாத அமைப்புகளோடு ஓப்பந்தம் போட்டு அமைதியை நிலைநாட்டினார்.
அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, ஆட்சிக்கு வந்த பாஜகவால் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. மே 3ஆம் தேதி மைத்ரேயி சமூகம் மற்றும் குக்கி சமூகம் இடையே ஆரம்பித்த கலவரத்தில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் 700க்கும் மேற்பட்ட முகாமக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த சமயம், கர்நாடாக மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தை சென்று பார்க்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்சா நீண்ட நாட்கள் கழித்து வந்து பார்வையிட்டு, நீதிபதி தலைமையல்னா குழு அதனை விசாரிக்கும் என கூறிவிட்டு சென்றார். இனி தீவிரவாதிகள் மத்தியில் ஒப்பந்தம் போட்டாலும் கலவரம் நடந்து கொண்டு தான் இருக்கும் என தோன்றுகிறது. ஆனால் இந்த மணிப்பூர் விவகாரம் குறித்து இதுவரை நாட்டின் பிரதமர் வாய் திறக்கவில்லை என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…