சக்கர நாற்காலியில் வந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!
குடியரசுத்தலைவர் தேர்தலில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார்.