முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம் 10-ம் தேதி மூளை அறுவை சிகிக்சை காரணமாக டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கோமாவில் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, அவருக்கு, கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இன்று காலை 9 மணி அளவில் பிரணாப் முகர்ஜியின் உடல் ராணுவ மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில் அவரின் உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, டெல்லியில் உள்ள லோதி சாலை மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…